Saturday, 23 March 2013

TNTET TAMIL 006




அகரமுதலி:



• அகராதி என்னும் சொல் தற்போதைய வழக்கில் அகரமுதலி என வழங்கப்படுகிறது.

• தமிழ் அகரமுதலி வரலாற்றில் செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாகும்.

• நிகண்டுகளின் பழமையானது - சேந்தன் திவாகரம்.

• சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் - திவாகரர்.

• மொத்த நிகண்டுகளின் எண்ணிக்கை - 25

• நிகண்டுகளின் சிறப்பானது - சூடாமணி நிகண்டு

• சூடாமணி நிகண்டுவை இயற்றியவர் - மண்டலப்புருடர்

• வீரமாமுனிவர் தொகுத்த சதுரகாதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.


• சதுரகாதி வெளிவந்த ஆண்டு - கி.பி.1732.


• சதுரகாதியில் பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாகப் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


• தமிழ் - இலத்தீன் அகராதி, இலத்தீன் - தமிழ் அகராதி, தமிழ் - பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு - தமிழ் அகராதி, போர்த்துக்கீசிய - இலத்தின் தமிழ் அகராதி ஆகிய அகர முதலிகளை உருவாக்கியவர் வீரமாமுனிவர்.


• தமிழ் - தமிழ் அகராதி லெவி - ஸ்பால்டிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.


• அபிதான கோசம் என்பது தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி ஆகும். இது 1902ஆம் ஆண்டு வெளியானது.


• அபிதான சிந்தாமணி - இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களையும், முதன்முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை தொகுத்து வெளியிட்டவர் சிங்காரவேலனார்.


• பொது அறிவு, உளவியல், புவியியல், புள்ளியியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கு கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டன.

 மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.

• அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.



விலங்குகளின் இளமைப் பெயர்கள்


  • அணிற்பிள்ளை, 
  • ஆட்டுக்குட்டி, 
  • கழுதைக் குட்டி,
  •  குதிரைக்குட்டி,
  •  நாய்க்குட்டி, 
  • பன்றிக்குட்டி, 
  • எருமைக்கன்று, 
  • பசுங்கன்று,
  •  கீரிப்பிள்ளை, 
  • சிங்கக் குருளை,
  • எலிக்குஞ்சு. 
  • புலிப் போத்து

பரிதிமாற் கலைஞர்

• இயற்பெயர் - சூரிய நாராயண சாஸ்திரி.
• இவரது காலம் - 1870 - 1903.
• ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் ஆகியவை இவர் இயற்றிய நாடகங்கள்.
• நாடக இலக்கணங்களைத் தொகுத்து, நாடகவியல் எனும் நூலை எழுதினார்.
• மானவிஜயம் நாடகம் களவழி நாற்பது எனும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.

சங்கரதாசு சுவாமிகள்

• இவரது காலம் 1867 - 1920
• வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோசனா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு, பவளக்கொடி உள்ளிட்ட நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.

பம்மல் சம்பந்தனார்

• இவரது காலம் - 1875 - 1964.
• மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு உள்ளிட்ட 94 நாடகங்களை இயற்றியுள்ளார்.
• சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே, அமலாதித்தியன் முதலிய நாடகங்களைப் படைத்தார்.

மதுரையில் வாழ்ந்த சங்கப்புலவர்கள்


 - நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார், இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகமதுரையில் வாழ்ந்த சங்கப்புலவர்கள் - நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார், இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார்.
இருபதாம் நூற்றாண்டில் நாடகக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர்கள் - பரிதிமாற்கலைஞர், சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார்னார், சேந்தம்பூதனார்.
இருபதாம் நூற்றாண்டில் நாடகக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர்கள் - பரிதிமாற்கலைஞர், சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார்


கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளை


• இயற்பெயர் - தேசிக விநாயகம் பிள்ளை
• சிறப்புப் பெயர் - கவிமணி
• பெற்றோர் - சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி
• பிறந்த ஊர் - தேரூர் (கன்னியாகுமரி மாவட்டம்)
• காலம் - 27.08.1876 - 26.09.1954
• இயற்றிய நூல்கள் - மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உரைமணிகள், மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள்.



கம்பர்:


• இயற்பெயர் - கம்பர்
• பிறந்த ஊர் - தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது
• தந்தை பெயர் - ஆதித்தன்
• போற்றியவர் - சடையப்ப வள்ளல்.
• இயற்றிய நூல்கள் - கம்பஇராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
• காலம் - பன்னிரெண்டாம் நூற்றாண்டு
தாயுமானவர்
• பெயர் - தாயுமானவர்
• பெற்றோர் - கேடிலியப்பர் - கேசவல்லி அம்மையார்
• மனைவி - மட்டுவார்குழலி
• ஊர் - நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)
• பணி- திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்.
• காலம் - கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
• நூல் - தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

குமரகுருபரர்

• இயற்பெயர் - குமரகுருபரர்
• ஊர் - திருவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்)
• பெற்றோர் - சண்முக சிகாமணிக் கவிராயர், - சிவகாம சுந்தரி.
• சிறப்பு - இளமையில் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்
• இவர் எழுதிய நூல்களின் பெயர் - நீதிநெறி விளக்கம், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்.



ராமலிங்க அடிகளார்

• சிறப்புப் பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
• பிறந்த ஊர் - மருதூர் (கடலூர் மாவட்டம்)
• பெற்றோர் - ராமையா - சின்னம்மையார்
• இவர் எழுதிய நூல்கள் - ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
• வாழ்ந்த காலம் - 5.10.1823 - 30.01.1874


தணிகை உலகநாதன்

• பெயர் - தணிகை உலகநாதன்
• ஊர் - திருவத்திபுரம், வேலூர் மாவட்டம்
• பெற்றோர் - தா.தணிகாசலம் - சுந்தரம் அம்மையார்
• காலம் - 01.10.1921 - 19.11.1993
• இயற்றிய நூல்கள் - பூஞ்சோலை, தேன்சுவைக் கதைகள், பாடும் பாப்பா, மாணவர் தமிழ் விருந்து, சிறுவர் நாடக விருந்து

முதுமொழிக்காஞ்சி


• ஆசிரியர் - மதுரைக் கூடலூர்கிழார்
• பிறந்த ஊர் - கூடலூர்
• நூல் குறிப்பு - காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று
• இந்நூலின் வேறொரு பெயர் - அறவுரைக்கோவை



காவடிச்சிந்து

• ஆசிரியர் - அண்ணாமலையார்
• ஊர் - திருநெல்வேலி மாவட்டத்துச் சென்னிகுளம்
• பெற்றோர் - சென்னவர், ஓவு அம்மாள்.
• நூல்கள் - காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ்.
• காலம் - 1861 - 1890

இனியவை நாற்பது

• ஆசிரியர் பெயர் - பூதஞ்சேந்தனார்
• ஊர் - மதுரை
• காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
• இவர் எழுதிய நூல் - இனியவை நாற்பது - இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.

தேம்பாவனி

• ஆசிரியர் பெயர் - வீரமாமுனிவர்
• இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
• பெற்றோர் - கொண்டல் போபெஸ்கி - எலிசபெத்
• பிறந்த ஊர் - இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
• அறிந்த மொழிகள் - இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்.
• தமிழ்க் கற்பித்தவர் - மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர்
• இயற்றிய நூல்கள் - ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை சதுரகராதி, திருக்காவலூர்க்க கலம்பகம், தொன்னூல் விளக்கம்.
• காலம் - 1680 - 1747

நளவெண்பா

• பெயர் - புகழேந்திப் புலவர்
• ஊர் - தொண்டை நாட்டின் பொன் விளைந்த களத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர்)
• சிறப்பு - வரகுணப் பாண்டியனின் அவைப் புலவர்
• ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர்க்கி
• காலம் - கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு. கம்பரும், ஒட்டக்கூத்தரும் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்
• இவர் எழுதிய நூல் - நளவெண்பா. நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூல். சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. இதில் நானூற்று முப்பத்தொரு வெண்பாக்கள் உள்ளன


இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு:



வேலு நாச்சியார்:

• ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
• பெற்றோர் - செல்லமுத்து சேதுபதி, சக்கந்தி முத்தாத்தாள்
• பிறப்பு - கி.பி.1730

கடலூர் அஞ்சலையம்மாள்:

• கடலூரில் 1890ஆம் ஆண்டு முதுநகரில் பிறந்தார்.
• 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதுதான் அஞ்சலையம்மாள் தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார்.
• நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டவர்.
• ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகளால் புகழப் பெற்றவர்.

அம்புஜத்தம்மாள்:

• 1899ஆம் ஆண்டு பிறந்தவர். வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்.
• வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.



No comments:

Post a Comment