Tuesday, 26 March 2013

TET SCIENCE 1

TNTET SCIENCE



ஆற்றலின் வகைகள்:



* வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல் 
* வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
* ஆற்றலின் அலகு - ஜூல்
* தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்

* ஒலி ஆற்றலால் வாகனங்களை இயக்க முடியாது.
* நிலக்கரியை எரிக்கும்போது, அதன் வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
* காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
* அசையும் இலை பெற்றுள்ள ஆற்றல் - இயக்க ஆற்றல்
* உங்கள் உள்ளங்கையைத் தேய்க்கும்போது வெளிப்படும் ஆற்றல் - வெப்ப ஆற்றல்.
* உராய்வின்மூலம் வெளிப்படுவது - வெப்ப ஆற்றல்.
* ஒலிபெருக்கியில் மின்னாற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
* மின்சார அழைப்பு மணி, வாகனங்களில் உள்ள ஒலி எழுப்பிகளில் மின் ஆற்றல் - ஒலி ஆற்றலாக மாறுகிறது.
* டார்ச் விளக்கில் வேதியாற்றல் மின்னாற்றலாக மாறி அதிலிருந்து ஒளி ஆற்றல் பெறப்படுகிறது.
* எந்த ஒர் ஆற்றல் மாற்றத்திலும் மொத்த ஆற்றலின் அளவு - மாறாமல் இருக்கும்.
* மின்சார அடுப்பு, மின்சார சலவைப்பெட்டி முதலியவற்றில் மின்னாற்றல் - வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது.
* சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் கிடைப்பது - மழை
* துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல் - சூரியனின் வெப்ப ஆற்றல்
* தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்: கயத்தாறு(திருநெல்வேலி மாவட்டம்), ஆரல்வாய்மொழி(கன்னியாகுமரி மாவட்டம்).
* மின்விளக்கில் மின்னாற்றால் - ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது.
* மின்விசிறியில் மின்னாற்றல் - இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது.
* காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
* நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் - மேட்டூர், பவானி சாகர்.
* நிலை ஆற்றல் - ஒரு பொருள் அதன் நிலையைப் பொருத்தோ அல்லது வடிவத்தைப் பொருத்தோ பெற்றுள்ள ஆற்றல்
* இயக்க ஆற்றல் - இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் (எ.கா: நகரும் பேருந்து, ஒடும் குதிரை, பாடும் நீர்)
* காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு காற்றாலைகள் மூலம் மின்னாற்றலைத் உற்பத்தி செய்யலாம்.
* வேதிவினையின் போது வெளிப்படும் ஆற்றல் - வேதியாற்றல்.(எ.கா:மரம், நிலக்கரி,பெட்ரோல்)
* எரிப்பொருள்களில் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும் மாற்றமடைகிறது.
* மின்கலன்களில் உள்ள வேதி ஆற்றலில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது.
* ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை எந்த ஆற்றலாக சேமித்து வைக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்பது ஆற்றல் அழிவின்மை விதி.
* ஆர்க்கிமிடிஸ் வாழ்ந்த காலம் - கி.மு. 212ஆம் ஆண்டு.
* ஆர்க்கிமிடிஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்.




காந்தவியல்:



* காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
* காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
* வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
* தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்

* காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி திசையை அறிந்துக் கொள்ள முடியும்.
* ஒய்வு நிலையில் இருக்கும்போது(தடங்கல் ஏதுமின்றி) காந்த ஊசியானது தோராயமாக வடக்கு தெற்கு திசையிலேயே நிற்கும்.
* காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் - ஒன்றையொன்று ஈர்க்கின்றன.
* காந்தங்களின் ஒத்ததுருவங்கள் - ஒன்றையொன்று விலக்குகின்றன.
* காந்தப் பாறைகளை மாக்னஸ் கண்டு பிடித்ததால் அதற்கு மாக்னட் என்று பெயர் வந்தது.
* காந்தங்கள் எப்பொழுது அதன் காந்தத் தன்னையை இழந்து விடுகின்றன? - வெப்பப்படுத்தும் பொழுதும், கீழே போடும்பொழுதும், சுத்தியால் தட்டும் பொழுதும்.
* காந்தத்தில் ஈர்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி இருமுனைகள் ஆகும்.
* மின்காந்த தொடர் வண்டிக்கு மிதக்கும் தொடர்வண்டி என்ற பெயரும் உண்டு.
* ஒலி நாடா, கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குறுந்தகடு, கணிணி போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை வைத்தால் அவை காந்தத்தன்மையை இழந்து விடும்.
* புவி மிகப்பெரிய காந்தமாக செயல்வடுகிறது என்று அறிவித்தவர்? - 1600ல் வில்லியம் கில்பர்ட்.
* ஜெயண்ட் வீல் எனப்படும் மிகப் பெரிய இராட்டினங்களை இயக்க மின் காந்தங்கள் தேவை.
* மாக்னடைட் - ஒர் இயற்கைக் காந்தம்
* இந்தியாவின் முதல் தொடர்வண்டி மும்பையிலிருந்து தானேவுக்கு 1853ஆம் ஆண்டு விடப்பட்டது.
* மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவியை அளித்தவர்கள் - சீனர்கள்



ஒளியியல்



* பூமி நிலையாக இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கோப்பர் நிக்கஸ் கருத்தினை யார் தன்னுடைய ஆய்வுகள் மூலம் நிரூபித்தார் - கலிலியோ.
* கி.பி.1609ஆம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் - கலிலியோ
* சூரிய ஒரு விண்மீன்; நிலவு கோளவடிவம் கொண்டது என கண்டுபிடித்தவர் - கலிலியோ.

* கலிலியோ எந்த நாட்டைச் சார்ந்தவர் - இத்தாலி
* கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியால் சூரியக் குடும்பம் பற்றிய பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
* உலக விண்வெளி ஆண்டு கொண்டாடப்பட்ட ஆண்டு - 2009 ஆம் ஆண்டு(தொலைநோக்கி கண்டுபிடித்து 400 ஆண்டுகள் நி்றைவடைந்ததை ஒட்டி)
* கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி கருவி தற்போது இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ் நகரில் உள்ளது.
* எந்தெந்தப் பொருள்கள் நமக்கு ஒளியைத் தருகிறதோ அவை ஒளிமூலங்கள் என்கிறோம்.
* பொருள்களைப் பார்க்க நமக்கு தேவையானது - ஒளி
* ஒளிரும் பொரும் பொருள்கள் - சூரியன் விண்மீன்கள், மெழுவர்த்தி, டார்ச்விளக்கு போன்றவை.
* தாமாக ஒளியைத் தரும் பொருள்கள் - ஒளிரும் பொருள்கள்.
* தாமாக ஒளியைத் தராத பொருள்கள் ஒளிராப் பொருள்கள்.
* சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப் பொருளாகும்.
* சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் - 8 நிமிடங்கள் 20 வினாடிகள்.
* சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் போது உண்டாவது - கிரகணங்கள்.
* சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப்பொருள் ஆகும்.
* ஒளி நேர்கோட்டில் செல்கிறது.
* தன்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் - ஒளிபுகாப் பொருள்கள்.
* தன்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் - ஒளிபுகும் பொருள்கள்.
* தன்வழியே பகுதியாக ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் - ஒளிகசியும் பொருள்கள்




செல்லின் அமைப்பு:




* உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்
* நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
* செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
* செல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்

* செல்லுலா எனும் இலத்தீன் மொழி சொல்லுக்கு - ஒரு சிறிய அறை என்று பெயர்.
* வெறும் கண்களால் எதை பார்க்க முடியாது - செல்லை
* செல்களை எதன் உதவிக்கொண்டு காணமுடியும் - நுண்ணோக்கி (Microscope)
* செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
* செல்லின் உட்கருவையும், செல்லுக்குள்ளே தனி உலகம் இருப்பதையும் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்
* எதை சாப்பிடுவதற்கு முன்னும் அதை நுண்ணோக்கியில் பார்த்த பிறகே சாப்பிடும் பழக்கம் உள்ளவர் - இராபர்ட் பிரெளன்.
* இராபர்ட் பிரெளன் ஆற்றிய பணி - ஆசிரியர் பணி.
* தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை விஞ்ஞானிகள் - புரொகேரியாடிக் செல்(எளிமையான செல்) என அழைப்பர்.
* செல்லின் வெளிச்சுவர், உட்கரு உட்பட நுண்ணுறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்லிற்கு - யூகேரியாட்டிக்செல்(முழுமையான செல்) என்று பெயர்.
* மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை - 6,50,00,00 செல்கள்.
* கணிகங்கள் இல்லாத செல் - விலங்குசெல்
* தாவரசெல்லுக்கே உரிய நுண் உறுப்பு - கணிகம்.
* புரோட்டோ என்றால் - முதன்மை என்று பொருள்
* பிளாஸ்மா என்றால் - கூழ் போன்ற அமைப்பு என்று பொருள்.
* பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
* சைட்டோபிளாசம், உட்கரு இரண்டையும் உள்ளடக்கியது - புரோட்டோபிளாசம்.
* பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதி - சைட்டோபிளாசம்.
* செல்லின் உட்கருவைப் பாதுகாப்பதும், அது சொல்லும் வேலையை தடங்கல் இல்லாமல் செய்வது - சைட்டோபிளாசம்.
* உட்கருவின் வடிவம் - கோளவடிவம்.
* உடல் வடிவத்தை தீர்மானிப்பது - உட்கரு (நியூக்ளியஸ்)
* ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது - உட்கரு.
* செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியாவிடம் உள்ளது.
* தாவர, விலங்கு செல்கள் எந்த வகையை சார்ந்த செல் - யூகேரியாட்டிக்செல்
* பாக்டீரியா - புரோகேரியாடிக்செல் வகையை சார்ந்தது.
* விலங்கு செல்லில் மட்டுமே இருப்பவை - சென்ட்ரோசோம்
* விலங்கு செல்லை சுற்றியுள்ள படலத்திற்கு பெயர் - பிளாஸ்மா
* செல்லுக்கு வடிவம் கொடுப்பது - பிளாஸ்மா
* புதிய செல்களை உருவாக்குவது - சென்ட்ரோசோம்.
* விலங்குகளைவிடத் தாவரம் இருகி இருப்பதற்குக் காரணம் - தாவரங்களின் செல்சுவர் அமைப்பு
* செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை - செல்சுவர்
* செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பது, செல்லுக்கு வடிவம் தருவது - செல்சுவர்
* சத்து நீரை சேமிப்பதும், செல்லின் உள் அழுத்தத்தை ஒர் மாதிரி பேணுவதும் நுண்குமிழ்கள் வேலை.
* தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை.
* செல்லின் ஆற்றலின் மையம் - மைட்டோகாண்ட்ரியா
* சென்ட்ரோசோம் என்னும் நுண்ணுறுப்பு - தாவர செல்லில் இல்லை.
* தற்கொலைப்பைகள் என அழைக்கப்படும் செல் உறுப்பு - லைசோசோம்கள்
* செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு (நியூக்ளியஸ்)
* செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் கோள வடிவம் கொண்ட நுண்ணுறுப்பு - உட்கரு.
* செல்லுக்குள் நுழையும் நுண் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு - லைசோசோம்.
* மிகவும் நீளமான செல் - நரம்பு செல்
* நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் - வெங்காயத்தோலின் செல்.
* புரதத்தை உற்பத்தி செய்வது - ரிபோசோம்கள்.
* செல்லின் புரதத் தொழிற்சாலை - ரிபோசோம்கள்.
* செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
* உண்ணும் உணவிலிருந்து புரதச்சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும், நம் உடலுக்கும் வலு சேர்ப்பது - கோல்கை உறுப்புகள்.
* உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பது - கோல்கை உறுப்புகளின் வேலை.
* புரோட்டாபிளாசத்திற்கு பெயர் இட்டவர் - ஜெ.இ.பர்கின்ஜி
* எலும்புகள் - ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனது.
* இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனது என்று உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் - ஆண்டவன் வான் லூவன்ஹாக் (1675)



* உடலுக்கு ஊட்டத்தைத் தரும் பொருள்களை உணவு என்கிறோம்.
* உணவில், உடலுக்குத் தேவையான சத்துக்களையே ஊட்டச்சத்துகள் எனக் கூறுகிறோம்.
* உடலுக்கு ஆற்றல் அளிப்பவை - கார்போஹைட்ரேட்டுகள். கொழுப்பு.
* வளர்ச்சியை அளிக்கக் கூடியவை - புரதங்கள்

* உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துபவை - வைட்டமின்கள்
* உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை - தாது உப்புகள்
* உணவைக் கடத்தவும், உடல் வெப்பத்தை ஒழுங்குப்படுத்துபவை - நீர்
* வெள்ளரிக்காயின் நீரின் அளவு - 95 சதவிகதம்
* பாலில் நீரின் அளவு - 87 சதவிகதம்
* முட்டையில் உள்ள நீரின் அளவு - 73 சதவிகதம்
* காளானில் உள்ள நீரின் அளவு - 92 சதவிகதம்
* உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு - 75 சதவிகதம்
* தர்பூசணியில் உள்ள நீரின் அளவு - 99 சதவிகதம்
* ஒரு துண்டு ரொட்டியில் உள்ள நீரின் அளவு - 25 சதவிகதம்
* காய்கறிகள், பழங்களை நறுக்கிய பின் கழுவினால், அவற்றில் உள்ள வைட்டமின் சத்துக்கள் இழக்கப்படுகிறது.
* காய்கறிகள், பழங்களின் தோல்களில் அதிகயளவில் வைட்டமின்கள், தாது உப்புகள் காணப்படுகின்றன.
* வைட்டமின் D சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது.
* வைட்டமின் A குறைப்பாட்டினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் B குறைப்பாட்டினால் பெரி-பெரி என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் C குறைப்பாட்டினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் D குறைப்பாட்டினால் ரிக்கட்ஸ் என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் E குறைப்பாட்டினால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.
* வைட்டமின் K குறைப்பாட்டினால் இரத்தம் உறையாமை ஏற்படுகிறது.
* புரதம் குறைபாட்டினால் குவாஷியோர்கள், மராஸ்மஸ் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
* கால்சியம் குறைப்பாட்டினால் எலும்பு மற்றும் பல் சிதைவு ஏற்படுகிறது.
* இரும்பு சத்து குறைப்பாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
* அயோடின் குறைப்பாட்டினால் முன்கழுத்து கழலை ஏற்படுகிறது.
* அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவே சரிவிகித உணவாகும்.
* ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்பதால் குறைபாட்டு நோய்களைத் தவிர்க்கலாம்.
* சூரிய ஒளி, கரியமில வாயு, நீர், பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தாவரங்கள் ஸ்டார்ச் (சர்க்கரை) தயாரிப்பது - ஒளிச்சேர்க்கை
* உணவூட்டம் என்பது - உணவை உட்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாக்குதல் என பல நிலைகளை உடையது.
* தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல் - தற்சார்பு ஊட்ட முறை.
* தற்சார்பு ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு - பசுந்தாவரங்கள், யூக்ளினா
* ஒட்டுண்ணி உணவூட்டத்துக்கு எடுத்துக்காட்டு -கஸ்க்யூட்டா
* கஸ்க்யூட்டாவின் அறிவியல் பெயர் - கஸ்க்யூட்டா ரிஃளெக்ஸா( ஊர்களில் அழைக்கப்படும் பெயர்- அம்மையார் கூந்தல், சடதாரி, தங்கக்கொடி)
* புற ஒட்டுண்ணிகள் - பேன், அட்டைப்பூச்சி
* அக ஒட்டுண்ணி - உருளைப்புழு
* சாறுண்ணி - காளான்
* தாவரங்களை மட்டுமே உண்பது தாவர உண்ணி (ஆடு, மாடு)
* விலங்குகளை மட்டுமே உண்பது மாமிச உண்ணி (புலி)
* தாவரங்களையும், விலங்குகளையும் உண்பது அனைத்து உண்ணி (காகம்)
* பூச்சி உண்ணும் தாவரம் - நெப்பந்தஸ், டிரோசீரா, யுட்ரிகுலேரியா
* ஸ்கர்வி நோய்க்கான அறிகுறி - பல் ஈறுகளில் இரத்தம் வடிதல்
* ரிக்கட்ஸ் நோய்க்கான அறிகுறி - வலிமையற்ற வளைந்த எலும்பு
* மலட்டுத் தன்மைக்கான அறிகுறி - குழந்தையின்மை, நோய் எதிர்ப்பு தன்மை குறைதல்
* இரத்தம் உறையாமைக்கான அறிகுறி - சிறிய காயம் ஏற்படும்போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல்.
* முன்கழுத்து கழலை நோய்க்கான அறிகுறி - கழுத்துப் பகுதியில் வீக்கம் காணுதல்
* இரத்த சோகை நோய்க்கான அறிகுறி - மயக்கம் வருதல், உடல் சோர்வு.
* எலும்பு மற்றும் பல் சிதைவு நோய்க்கான அறிகுறி - எலும்பு, பற்களின் வலிமை குறைதல்.
* மாலைக்கண் நோய்க்கான அறிகுறி - பார்வைக் குறைபாடு, மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடியாமை.
* பெரி-பெரி நோய்க்கான அறிகுறி - ஆரோக்கியமற்ற நரம்பு, தசைச் சோர்வு.
* மராஸ்மஸ் நோய்க்கான அறிகுறி - குச்சி போன்ற கை, கால்கள், மெலிந்த தோற்றம், பெரிய தலை, எடைக் குறைவு, உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைதல்.
* குவாஷியோர்கள் நோய்க்கான அறிகுறி - வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு, கை மற்றும் கால்களில் வீக்கம்.







No comments:

Post a Comment