ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை
குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் - கபிலர்.
* குறிஞ்சிப் பாட்டு எந்த நூல்களுள் ஒன்று - பத்துப்பாட்டு
* கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
* இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
* புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான்.
* தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பால் வீதி
ஜவர்கர்லால் நேரு:
* நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால் நேரு
* நேருவின் துணைவியார் பெயர் - கமலா
* தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.
* நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம் எழுதியுள்ளார்.
* பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.
* நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.
* போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்
* அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.
* இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.
* தழை என்பதன் பொருள் - செடிகொடி.
** குறிப்பு:
* சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.
* மில்டன் - ஆங்கில கவிஞர்.
* பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.
* காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).
* டால்ஸ்டாய் - இரஸ்ய நாட்டு எழுத்தாளர்(போரும் அமைதியும் நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.
* பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.
* பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்).
* கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
* நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.
நாட்டுப்புறப்பாட்டு:
* எழுத்து வழியாக வராமல் வாய் வழியாக பரவுகின்ற பாட்டு அல்லது தாளில் எழுதாத பாடல் - நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.
* எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகள் - வாய்மொழி இலக்கியம் என்ப்படுகிறது.
* சென்னை போன்ற பெருநகரங்களில் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல் - கானா பாடல்.
* பிறந்த குழந்தைகளுக்கு பாடுவது - தாலாட்டுப் பாடல்.
* கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு பாடுவது - விளையாட்டுப் பாடல்.
* வேலை செய்வோர் களைப்பு நீங்க பாடுவது - தொழிற் பாடல்
* திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பாடப்பாடுவது - சடங்கு பாடல், கொண்டாட்டப் பாடல்.
* சாமி கும்பிடுவோர் பாடுவது - வழிப்பாட்டுப் பாடல்.
* இறந்தோர்க்கு பாடுவது - ஒப்பாரி பாடல்.
நாலடியார்
நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள்.
* நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது.
* நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
* நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நூல் - நாலடியார்.
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்கள்.
* பதினெண்கீழ்க்கணக்கு எத்தனை நூல்களை உள்ளடக்கியது - 18
* பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சேர்ந்து மேல்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகிறது.
* சங்க இலக்கியகளுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பிற்கு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என பெயர்.
* பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் - சங்க நூல்கள் என அழைக்கப்படுகின்றன.
நான்மணிக்கடிகை:
* ஆசிரியர்: விளம்பிநாகனார், விளம்பி என்பது ஊர் பெயர். நாகனார் - இயற்பெயர்.
* கடிகை என்றால் - அணிகலன் என்று பொருள்.
* நான்மணிக்கடிகையில் உள்ள ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களைக் கூறுகின்றன.
* நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது எதன் பொருள் - நான்மணிக்கடிகை.
* குடும்பத்தின் விளக்கு - பெண் என்றும், பெண்ணுக்கு விளக்கு பண்பில் சிறந்த பிள்ளைகள் மனத்திற்கினிய அன்புமிக்க பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி, என்ற கருத்து இப்பாடலில் வருகிறது.
** பொருள்: மடவாள் - பெண், தகைசால் - பண்பில் சிறந்த, உணர்வு - நல்லெண்ணம், காதல்புதல்வர் - அன்பு மக்கள்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:
* செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை எழுதியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
* பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு.
* காலம்: 13.04.1930 - 08.10.1959
* மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.
* தனது பாடல்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளை கூறியுள்ளார்.
** சில பாடல் வரிகள்:
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
"பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்"
"காயும் ஒரு நாள் கனியாகும் -நம்
கனவும் ஒரு நாள் நனவாகும்"
புறநானூறு:
* புறநானூறு = புறம் + நான்கு + நூறு.
* தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.
* இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
* அதியமானின் நண்பர் - ஔவையார்.
* சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.
* நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார்.
சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.
* ஔவை என்பதன் பொருள் - தாய்.
பாடல் வரிகள்:
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்
** பொருள்: அவல் - பள்ளம், மிசை - மேடு, நல்லை - நன்றாக இருப்பாய்.
* திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் - கவிஞர் தாராபாரதி. இவர் எழுச்சிமிக்க கவிதைகளை எழுதுவதில் வல்லவர். ஆசிரியராக பணியாற்றியவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர்.
* காலம்: 26.02.1947 - 13.05.2000
* பிற நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்.
தமிழர் ஆடற்கலைகள் - Tamil dance styles.
தமிழர்களின் ஆடற்கலைகள் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது பரதநாட்டியம் தான்.
அதைவிடுத்து வேறு ஆடல்கள் தமிழர்கள மத்தியில் இல்லையா? இருக்கிறது. பல ஆடற்கலைகள் காலம் காலமாக தமிழர்களால் ஆடப்பட்டு வருகிறது.
படம் ;- தமிழர் ஆடற்கலைகளில் சிறப்பு மிக்க சில ஆடற்கலைகள்.
௧) கரகாட்டம் - தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடும் நடனம்
௨) கும்மியாட்டம் - கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.
௩) கோலாட்டம் - கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் நடனம்.
௪) பொய்க்கால் குதிரை ஆட்டம் - குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம்
௫) புலியாட்டம் - புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம்
௬) மயிலாட்டம் - மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும்.
௭) ஒயிலாட்டம் - ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம்.
௮) குறவன் குறத்தி ஆட்டம் - குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம்
முதுமொழிக்காஞ்சி
• ஆசிரியர் - மதுரைக் கூடலூர்கிழார்
• பிறந்த ஊர் - கூடலூர்
• நூல் குறிப்பு - காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று
• இந்நூலின் வேறொரு பெயர் - அறவுரைக்கோவை
No comments:
Post a Comment