Saturday, 23 March 2013

TNTET TAMIL 004









ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை






திருக்குறள்












* இயற்றியவர் - திருவள்ளுவர். இவர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்று கூறப்படுகிறது.


* திருவள்ளுவரின் காலம் - கி.மு.31. இந்த ஆண்டு பற்றி தெளிவான சான்றும் கிடைக்கவில்லை. பெற்றோர் பற்றிய தெளிவான சான்றும் கிடைக்கவில்லை.








* திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் - தெய்வப்புலவர், செந்நாபோதார், நாயனார், முதற்பாவலர், பொய்யில்புலவர், நான்முகனார், பெருநாவலர், மாதானுபங்கி, தேவர்.




* திருக்குறள் - உலகப் பொதுமறை எனவும் முப்பால் எனவும் வாயுறைவாழ்த்து எனவும் அழைக்கப்படுகிறது.




* திருக்குறள் - அறம் + பொருள் + இன்பம் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இயல்களின் எண்ணிக்கை 9.


* திருக்குறளின் 3 பிரிவுகள்: அறத்துப்பால் 38 அதிகாரங்களும், பொருட்பால் 70 அதிகாரங்களும், காமத்துப்பால் 25 அதிகாரங்களும்.















* திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.



* திருக்குறள் 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் கொண்டது.


* திருகுறளுக்கு 10 பேர் உரையெழுதியுள்ளனர். அவற்றில் சிறந்த உரை பரிமேலழகர் எழுதிய உரை.


குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டு: கிறிஸ்துவ ஆண்டு +31 அதாவது 2012 என்பது திருவள்ளுவர் ஆண்டில் (2012+31) 2043 என்று கூறுவோம்.





* திருக்குறளின் சிறப்பு பெயர்: முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்திரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், பொருளுரை, முதுமொழி, திருவள்ளுவபயன்.












No comments:

Post a Comment