Education questions
• வார்தா எனும் ஆதாரக் கல்வித் திட்டம் எப்போது முடங்கிப்போனது -1950.
• வார்தா எனும் ஆதாரக் கல்வித் திட்டத்தை எதை மனதில் வைத்துக்கொண்டு காந்தி தொடங்கினார் - இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமான கிராம முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்துதான்.
• மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் கருவியாக காந்தி முன்னிறுத்துவது எதை - கல்வி.
• கல்வியின் குறிக்கோளாக காந்தி உணர்த்துவது - தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்றும் கருவி; பண்பாட்டினைப் பாதுகாக்கும் அறன்; நன்னடத்தையை வளர்க்கும், குடியுரிமை பயிற்சி அளித்தல்; அறிவு வளர்ச்சிக்கான திறவுகோல்.
• எந்த வயதை கட்டாயக் கல்விக்கான அடிப்படையாக காந்தி நிர்ணயித்திருந்தார் - 6 - 14.
• வார்தாவின் சிறப்பம்சங்கள் - 6 - 14 வரை கட்டாய இலவசக் கல்வி; தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் கல்வி; அனைத்துப் பாடங்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழிலுடன் இணைக்கப்படல்; உற்பத்தியுடன் இணைந்த கல்விச் செயல்முறை; தாய்மொழியே பயிற்றுமொழி; சமயம், நன்னடத்தைக்கு முக்கியத்துவம்.
• வார்தாவின் தோல்விக்கு காரணங்கள் - சுயசார்புத் தன்மைக்கு முக்கியத்துவம்; ஆதாரக் கல்வி உளவியல் அடிப்படையில் இல்லை- எல்லாப் பாடங்களையும், கைத்தொழிலுடன் இணைக்க முடியாது - இந்தக் கல்வி முறை நகர்ப்புற மாணவர்களுக்கு பொருந்தவில்லை - உலகப்போக்குக்கு பொருந்தவில்லை - அறிவியல், கணிதம் பாடங்களுக்கு முக்கியத்துவம் இல்லை- ஆங்கிலத்திற்கு இடமில்லை - பொதுக் கல்வி அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மை.
• நவீன இந்தியத் துறவி என்று அழைக்கப்படுபவர் - ரவீந்திரநாத் தாகூர்.
• கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பிற்காக நோபல் பரிசு பெற்றது எப்போது - 1913.
• தாகூர் கல்விக்கு புதிய வடிவம் கொடுப்பதற்காக வடிவம் கொடுக்க உதவிய அவரின் கல்வி நிலையத்தின் பெயர் - சாந்தி நிகேதன் (1901).
• சாந்தி நிகேதன் பின்னாளில் விஷ்வபாரதி பல்கலைக்கழகமாக மாறியது எப்போது - 1921.
• தாகூருக்கு நைட் விருது ஆங்கில அரசால் எப்போது வழங்கப்பட்டது - 1915.
• நைட் விருதை எதற்காக தாகூர் திருப்பி அளித்தார் - ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து.
• தாகூரின் கல்வி நோக்கங்கள் எதை ஒட்டியதாக இருந்தது - உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒழுக்க - ஆன்மிக வளர்ச்சி, சமூக வளர்ச்சியும், பன்னானாட்டு சிந்தனையும்.
• தாகூரின் கற்பித்தல் முறைகளில் முக்கியமானது - இயற்கையோடு இணைந்த கற்பித்தல் முறை.
• தாகூரின் விஷ்வபாரதி பல்கலைக்கழகத்தின் மூன்று நோக்கங்கள் - கீழை நாடுகளின் கலாசாரங்களைப் போதித்தல், கிராம சீரமைப்பு, மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் குறிப்பாக இந்தியாவிற்கும் இடையே பரஸ்பர ஒற்றுமையைப் பேணுதல்.
• சாந்தி நிகேதனின் பாத் பவனின் சிறப்பு - இங்கு துவக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை அளிக்கப்படுகிறது.
• விஷ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முக்கியப் பிரிவுகள் - வித்யா பவன் (கீழை நாட்டு மொழிகளுக்கு முக்கியத்துவம்), சீன பவன் (சீன மொழிக்கு முக்கியத்துவம்), கலா பவன் (கைத்தொழிலுக்கு முக்கியத்துவம்), சங்கீத் பவன் (இசைக்கு முக்கியத்துவம்), ஹிந்தி பவன்(ஹிந்தி மொழி, இலக்கியத்திற்கு முக்கியத்துவம்), அத்யாபக் சிக்ஷா பவன் (ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம்), ரவீந்திரபவன் (தாகூரின் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம்), இஸ்லாமிய ஆய்வுப் பிரிவு.
• இந்தியக் கல்வி மறுமலர்ச்சிக்கு வழிகோலியவர்கள் யார் - காந்திஜி, தாகூர்.
• அரவிந்தர் பன்னாட்டு பல்கலைக்கழக மையம் உருவான ஆண்டு - 1952.
• கல்வியின் உண்மையான அடிப்படை என அரவிந்தர் கூறியது யாது - மன ஆராய்ச்சி.
• குழந்தைகளை அரவிந்தர் எப்படி உவமையாகச் சொன்னார் - சுயமேம்பாடு அடையக் கூடிய உயிரி.
• அரவிந்தரின் கூற்றுப்படி ஆசிரியர் என்பவர் யார் - கற்றலுக்கு உதவுபவர்.
• அறிவு வளர்ச்சிக்கான சாதனம் என்று அரவிந்தர் கூறுவது எதை - மனம்.
• கல்வி எதைப் பெற்றுத்தரும் கருவியாக அரவிந்தர் கூறுகிறார் - ஆன்ம விடுதலையையும்,பொருள் சார்ந்த வாழ்க்கை வளத்தையும்.
• அரவிந்தர் ஆசிரமப் பள்ளியை முதன் முதலில் எப்போது உருவாக்கினார் - 1943.
• ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் ஜே.கே. வாழ்ந்த காலம் - 1896 - 1986
• ஜே. கிருஷ்ணமூர்த்தி ‘குருவின் காலடியில்’ எனும் நூலை எழுதும்போது அவரின் வயது எத்தனை - 16.
• ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வித் தத்துவங்கள் :
• குழந்தைகளை அதன் போக்கில் அனுமதித்து அமைதிப்படுத்தும் வழிமுறையே கல்வி.
• கல்வி கற்பதற்கு செவிப்புலனால் கேட்பதும், புத்தகங்களைப் படிப்பது மட்டும் போதாது. இதனால், அறிவு திணிப்புத்தான் மிஞ்சும்.
• பார்த்ததையும், கேட்டதையும், படித்ததையும், அகநிலையில் தன் அனுபவங்களுக்கு ஏற்ப சுயமாக சிந்தித்தலே கற்றல்.
• பாடக்கூறுகளை ஒட்டுமொத்தமாக இணைத்து, அதைப் பயன்படுத்தி சிந்தித்தாலே நமது தனித்தன்மை வெளிப்படும். அதுவே உண்மையான கற்றல்.
• ஒரு முக சிந்தனையில் நம் புலன்களின் சக்திகள் அனைத்தும் குறிப்பிட்ட பொருள் அல்லது புள்ளியில் குவிக்கப்படுகிறது. கவனத்தில் அப்படியொரு குவி மையம் இல்லை.
• கற்றலில் சுதந்திரம் என்பது தன்னைச் சுற்றியுள்ள யாவற்றையும், அனைத்துக் கருத்துக்களையும், எவ்வித நிர்பந்தமோ, வற்புறுத்துதலோ இன்றி உற்று நோக்கி, அறிந்து பின்னர் யாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஆராயும் தன்மை பெற்றிருத்தலே.
• கற்பித்தலிலும், கற்றலிலும் போட்டி இருத்தல் கூடாது. போட்டியானது, அச்சம், வெறுப்பு, தோல்வி, பயம், வன்முறை ஆகியவைகளுக்கு வழிவகுக்கிறது.
• எவ்வித நிர்பந்தமும் இன்றி சுயமாக ஆராய்ந்தறியும் மனநிலையைப் பெற்றிருப்பதும், சிந்தித்து சீர்தூக்கி செயல்படுவதும்தான் சுதந்திரம்.
• அயல்நாட்டு கல்வி சிந்தனையாளர்கள் :
• ரூஸோ - குழந்தை மையக் கல்வி குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர்.
• ஃபுரேபெலின் - கிண்டர் கார்டன்.
• மாண்டிச்சோரி அம்மையார் - புலப்பயிற்சிக் கல்வி.
• வான்டூயின் - முற்போக்குக் கல்வி.
• பெர்ட்ரண்டு ரஸ்ஸலின் - மேம்பட்ட சமுதாய நிலைக்கான கல்வி.
• ஏ.எஸ்.நீலின் - கோடைமலைப் பள்ளி.
வீன் ஜாகுவஸ் ரூஸோ :
• நவீனக் கல்வி முறைக்கு வித்திட்டவர்
• 1712 ஆம் ஆண்டு ஜெனிவாவில் பிறந்தார்.
• 1750 ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியலின் முன்னேற்றம் என்ற நூலை எழுதினார்.
• 1753ஆம் ஆண்டு மக்களிடையே சமத்துவத்தின் தோற்றம் என்ற நூலை எழுதினார்.
• 1762ஆம் ஆண்டு சமூக ஒப்பந்தம், எமிலி அல்லது கல்வியைப் பற்றி - என்ற இரண்டு நூல்களை வெளியிட்டார் (ஐரோப்பாவின் கல்வி நிலைகளை சாடிய நூல்கள் இவை.).
• குழந்தையை தனியாக வளர விடுங்கள்; அவன் இயற்கைச் சூழலில் வளரட்டும்; சமூகத்தின் செயற்கைச் சூழல், அவனது இயல்பான வளர்ச்சியைத் தடைசெய்து, முன்னேற்றத்தை தடுக்கின்றது என்பதுதான் இவருடைய தத்துவம்.
• ரூஸோவின் தத்துவம் எப்படி அழைக்கப்பட்டது - இயற்கைக் கோட்பாடு.
• எத்தனை வயது வரை குழந்தைகளைக் காத்திட ரூஸோ வலியுறுத்துகிறார் - 12 வயது வரை.
• பயனுள்ள கல்வி என்பது - சுயமுயற்சியாலும், சுற்றுப்புறத்தை ஆராய்ந்தறிதலாலும் பெற்றிடுவதே ஆகும்.
• குழந்தைகள் ஒழுக்கத்தை எப்படி கற்றுக்கொள்வார்கள் என்று ரூஸோ கருதுகிறார் - இயற்கையின் விளைவுகளில் இருந்து குழந்தைகள் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக்கொள்வர்.
• சொல்வழிக் கற்றல் என்பது - நினைவுச் சுமையை மட்டுமே அதிகரிக்கச் செய்யும்.; உண்மையான கற்றல் நிகழாது.
• எமிலி அல்லது கல்வியைப் பற்றி நூலில் எமிலி என்பது என்ன - அந்தக் கதையில் வரும் கற்பனைச் சிறுவனின் பெயர்.
• புரோபெலின் என்பவர் - ஜெர்மானியக் கல்வியாளர்
• கிண்டர்கார்டன் எனப்படும் பாலர் கல்வியின் தந்தை என அழைக்கப்படுபவர் - ஃபுரோபெல்
• கிண்டர் கார்டன் என்பது -குழந்தைகள் பூங்கா.
• கருத்தியல் என்பது - லட்சியம்.
• கிண்டர்கார்டனின் முதன்மைக் கூறுகள் - சுயமான செயல், படைப்பாற்றல், சமூகப் பங்கேற்பு.
• ஜேக் அண்ட் ஜில், ஹம்டி டம்டி, சின்ட்ரலா போன்ற நர்சரி குழந்தைகளின் பாடல்களை எழுதியது - புரோபெல்.
• உலகில் முதல் குழந்தைப் பூங்கா பள்ளியைத் தோற்றுவித்தவர் - புரோபெல்
• வாருங்கள் நாம் குழந்தைகளுக்காக வாழ்வோம்’ என்ற பொன்மொழியை உதிர்த்தவர் - புரோபெல்.
மாண்டிசோரி அம்மையார் -
• இத்தாலி நாட்டு மருத்துவர்
• குழந்தைகள் வீடு எனும் பள்ளியை முதன் முதலில் இவர் தொடங்கிய ஆண்டு 1907.
• மாண்டிசோரி அம்மையார் இந்தியா வந்த ஆண்டு - 1940.
• இவரின் முக்கியக் கோட்பாடுகள் : தனிநபர் வளர்ச்சி, புலப்பயிற்சி, சுய கற்றல்.
• மாண்டிசோரி முறை செயல்படும் விதம்:
• பிரதியேகமாக உருவாக்கப்பட்ட கற்றல் சூழல்.
• ஆசிரியரின் நேரடிப் பார்வையில் சுய கற்றல்.
• உணவருந்த, ஓய்வெடுக்க, சுய கற்றல் சாதனங்களை இயக்கிக் கற்க தனித்தனி அறைகள்.
• நிலையான பாட வேளைகள் கிடையாது.
• குழந்தைகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்தச் செயலிலும் ஈடுபட சுதந்திரம் உண்டு.
• மாண்டிசோரி கல்வியில் ஆசிரியர்கள் எப்படி அழைக்கப்படுகின்றர் - இயக்குநர்.
• 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கற்பித்தல் முறைகளில் பாரம்பரியப் போக்குகளிலிருந்து முற்போக்கான அணுகுமுறைகள் தோன்றத் துவங்கியதற்கு காரணம் - ஜான் டூயி.
• கல்வியில் ஆராய்ச்சிப் போக்கைத் துவக்கி வைத்த பெருமை யாரைச் சேரும் - ஜான் டூயி.
• டூ யியின் பொதுத் தத்துவங்கள்: எதுவும் தற்காலிகமானவையே, உண்மைகளும் மாற்றத்திற்குட்பட்டவையே, இறுதி மதிப்புகள் என்று எதுவுமேயில்லை, மனித வாழ்க்கை சோதனைகளும் நோக்கத்தோடு கூடிய செயல்களின் தொடராகும்.
• டூயி எம்முறைக் கல்வியை ஆதரித்தார் - செயல்வழிக் கற்றல்.
• எந்த ஆண்டு நவோதயா பள்ளிகள் இயங்க ஆரம்பித்தன - 1986.
• நவோதயா பள்ளிகளுக்கு இன்னொரு பெயர் - முன்னோடிப் பள்ளி.
• எந்தப் பரிந்துரைப்படி நவோதயாப் பள்ளிகள் கொண்டுவரப்பட்டன - இந்திய தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி.
• முன்னோடிப் பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டுகள் - சமுதாயப்பள்ளிகள், பிரான்சிஸ் பார்கள் பள்ளி, டூயி சோதனைப்பள்ளி, வால்டார்ஜஃப் பள்ளிகள்.
• சுதந்தரப் பள்ளிகள் இயக்கம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது - 1960.
• சுதந்தரப் பள்ளிகளுக்கு மற்றொரு பெயர் - திறந்தவெளிப் பள்ளி.
• சுதந்தரப் பள்ளி எதற்கு எதிராக தொடங்கப்பட்டது - அமெரிக்கப் பொதுப்பள்ளி கல்வி முறைக்கு எதிராக.
• சமுதாயப் பள்ளிகள் எந்தக் கல்வியை வற்புறுத்தின - தொழிற் கல்வியை
• சமுதாயப் பள்ளிகளின் வகைகள் - சமுதாயத்தில் நிலவும் தொழில்களையே பாடச் செயல்களாக அமைத்தல், சமுதாயப் பிரச்சினைகளில் பெரியவர்களோடு ஒத்துழைக்கும் வகையில் மாணவர்களிடம் சமுதாயத்திறன்களை வளர்த்தல், சமுதாயத்தில் காணப்பட்ட மேம்பட்ட பண்புகள், செயல்கள் அனைத்தையும் சிறிய வகையில் பிரதிபலிக்குமாறு பள்ளிகளை அமைத்தல், சமுதாயப் பள்ளிகளை முன்னேற்றிடவும், விரிவுபடுத்திடவும் பள்ளிகள் செயல்படுதல்.
• முற்போக்குக் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் -பிரான்சிஸ் பார்க்கர்.
• பிரான்சிஸ் பார்க்கர் முதன்முதலில் அறிமுகப்படுத்திய கல்வி முறை - குழந்தை மையப் போக்கு கொண்ட முற்போக்குக் கல்வி முறை.
• குழந்தை ஒரு தெய்வீகப் பிறவி என்று கூறியவர்கள் யாவர் - பிரான்சிஸ் பார்க்கர், ரூஸோ.
• பிரான்சிஸ் பார்க்கர் கல்வி முறையில் நேரிடைக் களப் பயணங்கள் மூலம் அறிவியலும், புவியியலும் கற்பித்தல் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது - குவின்ஸி.
• வால்டார் ஐஃப்க் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர் - ரூடால்ஃப் ஸ்டெய்னர்.
• ரூடால்ஃப் ஸ்டெய்னருக்கு கல்வி வளர்ச்சியில் ஊக்கமளித்த இந்திய கல்வியாளர் - பிளாவட்ஸ்கி அம்மையார்.
• டூயி சோதனைப்பள்ளி எங்கு எந்த ஆண்டு துவங்கப்பட்டது - 1896 ஆம் ஆண்டு சிகாகோவில் தொடங்கப்பட்டது.
• அண்மைப் பள்ளிகளுக்கான கருத்தினை கோத்தாரிக் கல்விக் குழு முதன் முதலில் எந்த ஆண்டுகளில் வெளியிட்டது - 1964 - 66
No comments:
Post a Comment