Sunday, 24 March 2013

TET PSYCHYLOGY 005

குழந்தை மேம்பாடும் கற்பித்தல்

முறைகளும்  : 

CHILD DEVELOPMENT AND PEDAGOGY

வளர்ச்சிப் பருவங்கள்
சமூகத் தன்மையை வளர்க்கும் காரணிகள் - கட்டூக்கம், குழு ஊக்கம், பணி ஊக்கம்.
சமூகப் பணிகளை வளர்க்க என்ன செய்யவேண்டும் - ஆசிரியர்கள் மாணவர்களிடையே நமது பள்ளி, நமது நண்பர்கள், நமது பணி என்ற பரந்த மனப்பான்மையை ஏற்படுத்தவேண்டும்.
ஒழுக்கம் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது - நடத்தை, செயல், குணம்.
எந்த இயக்கங்களின் மூலம் பண்பு வளர்ச்சி அல்லது ஒழுக்கத்தைப் பேண முடியும் - செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம்.
பண்பு வளர்ச்சியை வளர்க்கும் காரணிகள் - நாட்டுப் பற்று, சமூகத் தொண்டு, இறைவழிபாடு, நேர்மையாக செயல்படுதல்.
கல்வி, ஒழுக்கம், நற்பண்புகள் போன்ற அறிவுவளர்ச்சிக்கு அடிப்படையாக சமுதாயத்தால் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் - பள்ளிக்கூடம்.
பள்ளிக்கூடங்கள் எந்தெந்த இடங்களில் இருக்கக்கூடாது - ஊரின் நடுப்பகுதி, போக்குவரத்து அதிகமுள்ள பகுதி, ரயில் பாதை, கடைத் தெரு போன்ற மக்கள் இரைச்சல் மிகுந்த இடம், தொழிற்சாலைக் கழிவுகள், புகை, கரி, சூளைகள், மயானம்.
பள்ளிக்குரிய நிலம் எங்கு இருக்கக்கூடாது - ஏரி, ஆற்றோரம், மலையோரம், ஈரம் மிகுந்த இடங்களில்.
பள்ளிக்குத் தேவையான சிறப்பம்சங்கள் என்ன - நூல் நிலையம், ஆய்வுக்கூடம், பொருட்காட்சிக் கூடம், பருவக்காற்று, மழை, வெள்ளம், புயல் உட்படாத சுத்தமான இடமாக இருக்க வேண்டும்.
பள்ளிக்குத் தேவையான சுகாதார வசதிகள் - கட்டடம், தள அமைப்பு, வகுப்பறைகள், தாழ்வாரம், கட்டட வடிவமும், நோக்கும் திசையும், வெளிச்சம், காற்றோட்டம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், பள்ளித்தோட்டம், குப்பைக் குழி.
பள்ளித் தள அமைப்பு எப்படி இருக்க வேண்டும் - கெட்டியாக, கருங்கல், சிமெண்ட், செங்கல்களால் ஆனதாக இருக்க வேண்டும். தளத்தை தினமும்,சுத்தம் செய்வதுடன் ஈரம் இருக்கக்கூடாது.
30 மாணவர்கள் கொண்ட வகுப்பறை எத்தனை சதுர அடியில் இருக்க வேண்டும் - 450 சதுர அடியில்.
வகுப்பறையில் வாசற் கதவு எந்தப் பக்கம் அமைவது நல்லது - ஆசிரியரின் இருக்கைக்கு பக்கவாட்டில்.
தாழ்வாரம் எங்கு இருக்க வேண்டும் - வகுப்பறையின் இரு பக்கங்களிலும்.
தாழ்வாரத்தின் பயன் என்ன - அதிக வெளிச்சமும், வெப்பக்கதிர்வீச்சும் தவிர்க்குமாறு அமைக்க வேண்டும்.
கட்டட வடிவம் எப்படி இருக்க வேண்டும் - எல், எச், இ, எல் போன்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவில் இருப்பது நல்லது.
ஜன்னலின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் - தரையிலிருந்து மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில்.
ஜன்னலின் பயன் என்ன - மாணவர்கள் எழுதப் படிக்க போதிய வெளிச்சம் பெற முடியும்.
குடிநீர் எப்படி வழங்க வேண்டும் - குழாய் மூலம் அல்லது பானைகளில் வைத்து, பானையை தினமும் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
கழிப்பறை வசதி - மாணவ, மாணவியருக்கு தனித்தனியே சிறுநீர் மற்றும் கழிப்பறை வசதி வேண்டும்.
கழிப்பறை பள்ளிக்கட்டடத்தின் எத்தனை அடிக்குள் இருக்கக் கூடாது - 40 அடி.
கழிப்பறை எண்ணிக்கை எவ்வாறு அமைய வேண்டும் - மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப.
ஒரு மாணவர் விளையாட எத்தனை அடி பரப்பு தேவை - சுமார் 50 சதுர அடி பரப்பு.
விளையாட்டின் மூலம் மாணவர்களிடையே ஏற்படும் மாற்றம் என்ன - குழு வளர்ச்சி, ஒருமைப்பாடு, விட்டுக்கொடுத்தல்.
விளையாட்டின் மூலம் குழந்தைகளிடையே ஏற்படும் மாற்றம் என்ன - குழு வளர்ச்சி, ஒருமைப்பாடு, விட்டுக்கொடுத்தல்.
விளையாட்டின் மூலம் குழந்தைகள் என்ன பலன் அடைவார்கள் - நல்ல ரத்த ஓட்டம், மன மகிழ்ச்சி.
பள்ளித் தோட்டம் அமைப்பதின் நோக்கம் என்ன - பள்ளிக்கு அழகைக் கொடுக்கும், உயிரியல், தாவரவியல் பாடங்களை நேரடி அனுபவம் மூலம் கற்கலாம்.
கூரை எவ்வாறு அமைய வேண்டும் - சூரிய வெப்பத்தை உட்செலுத்தக் கூடாது.
எந்தக் கூரையைப் பயன்படுத்தக்கூடாது - சிமெண்ட் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள், துத்தநாகத்தகடு, தென்னங்கீற்று, பனை ஓலை.
கூரை எவ்வாறு அமைக்கவேண்டும் - மட்டமாக இருந்தால் 12 அடிக்கு குறையாமல்.
மாணவர்களுக்கான தனி அறைகளின் அளவு எவ்வளவு - ஆதாரப் பள்ளி மாணவருக்கு 15 சதுர அடி. தொடக்கப்பள்ளி மாணவருக்கு - 9லீ சதுர அடி. உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு - 11லீ சதுர அடி.
ஆசிரியர்களின் அறை எப்படி இருக்க வேண்டும் - ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தனித்தனியாக.
வேளாண்மை சாதனங்கள் - மண்வெட்டி, கடப்பாரை, பூவாளி, வாளி, குடம், அரிவாள், டிராக்டர், மின் மோட்டார், கரும்பு பிழிவான்.
இசைக் கருவிகள் - ஜால்ரா, ஹார்மோனியம், புல்லாங்குழல், வீணை, சுருதிப்பெட்டி, பியானோ, தவில், தபேலா, சலங்கை, கித்தார்.
நெசவுக் கருவிகள் - சட்டத்தறி, நாடா, சர்க்கா, தார்க்குழல், நூல், மிதிகள், பண்ணை முளைகள், பாவு உருளை, துணி உருளை, எண்ணெய்க்கூடு.
ஓவியக் கருவிகள் - வண்ண சுண்ணாம்புக் கட்டி, தூரிகை, பேனா, கறுப்பு மை, அளவுகோல்.
தையல் கருவிகள் - நூல்கள், ஊசிகள், மாதிகள், மேட்டின் துணி, கத்திரி, அளவு நாடா.
தச்சுவேலைப் பொருட்கள் - சிறிய, பெரிய உளிகள், கத்தி, மூலைமட்டம், டி மட்டக் கருவி, உப்புக் காகிதம், ஆணி, பெவிக்கால், துளையிடும் கருவி.
தொழிற்கூட அறையின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் - நல்ல வெளிச்சம், காற்றோட்ட வசதி.
தொழிற்கூட அறையின் ஜன்னல் கதவுகள் எதனால் செய்யப்பட்டிருக்க வேண்டும் - கண்ணாடி அல்லது மரத்தால்.
தலைமையாசிரியர்களின் பொறுப்பின்கீழ் உள்ள பட்டியல்கள் - பள்ளி வரலாற்றுக் குறிப்புப் புத்தகம், ரசீது புத்தகம், தினசரி வரவுப் பதிவேடு, சிறப்புக் கட்டணம் வசூல் பட்டியல்.
வகுப்பு ஆசிரியரின் பொறுப்பில் உள்ள பட்டியல்கள் எவை - தேக்கப் பட்டியல், சுகாதாரப் பட்டியல், தொழில், கலைப் பயிற்சி பதிவேடுகள், விளையாட்டு, சமூகக் கலைபதிவேடுகள், பெற்றோர் சங்க கூட்டக் குறிப்பு.
மாணவர்கள் வைக்கவேண்டிய பட்டியல்கள் - தோட்டவேலை பற்றிய பதிவேடுகள், நாட் குறிப்புப் பதிவேடு, கொடி வணக்க கல்விப் பயணக் கிராமசேவை பற்றிய விவரக் குறிப்பு பட்டியல், மாத ஆண்டு அறிக்கை.
சத்துணவுத் திட்ட விவரக் குறிப்பு பட்டியல்களில் உள்ள காரணிகள் எவை - மாணவர்களின் வருகைப்பதிவேடு, தினமும் வழங்கப்பட்ட உணவு வகைகள் குறிப்பு, உணவுப் பொருள் செலவு செய்யப்பட்ட பதிவேடு, உணவுப் பொருட்கள் கையிருப்புப் பதிவேடு.
ஒழுங்கு என்பதன் பொருள் - பள்ளியில் பின்பற்றப்படும் திட்டங்கள் மற்றும் பள்ளியின் சட்ட திட்டங்களைப் பின்பற்றி நடத்தல், உத்தரவுகளுக்கு கீழ்படிதல்.
ஒழுங்கைப் பற்றிய பழைய கருத்து - மாணவர்களிடத்தில் அச்சம், அடித்தல், தண்டனை.
ஒழுங்கு பற்றிய தற்காலக் கருத்து - பணிவுடன் கீழ்படிதல்.
ஒழுங்கை எவ்வாறு ஏற்படுத்தலாம் - அமைதி, உழைப்பு.
மாணவரை மாணவர்களே தங்களின் பிரதிநிதிகளாக நியமிப்பது - மாணவர்களின் சுய ஆட்சி.
ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பு ஒழுங்கை கடைபிடிக்க வழிகாட்டுவது யார் - வகுப்பு மாணவர் தலைவன்.
பள்ளி நிர்வாகத்தில் மாணவர் தலைவர்களை நியமிப்பதன் பயன் என்ன - கடமையும், பொறுப்புணர்ச்சியும் மாணவர்களுக்கு அதிகரிக்கும்.
மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாணவர்கள் பிரதிநிதிகளையும், அங்கத்தினர்களையும் பணியாற்றச் செய்வது - மாணவர் சபை.
பள்ளி மாணவத் தலைவனை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள் - கல்வி விளையாட்டில் வியக்கத்தக்க இடம், நன்னடத்தை, முற்போக்கு எண்ணங்களின் அடிப்படையில்.
பள்ளி மாணவர் தலைவனின் பணிகள் - பள்ளி வேலைவகளில் தலைமை ஆசிரியருக்கு உதவுதல், பள்ளி அணிவகுப்பை நடத்துதல்.
பள்ளிக்கு வரும் பிரமுகர்களை வரவேற்று கௌரவிப்பது - பள்ளி மாணவர் தலைவன்.
வகுப்பு மாணவர் தலைவனின் பணிகள் - வகுப்பு ஆசிரியருக்கு உதவுவது, வகுப்பு நிர்வாகத்தில் செயலராகப் பணியாற்றுவது, அமைதியைக் கடைப்பிடிப்பது.
பள்ளியில் வழங்கப்படும் பரிசுகளால் விளையும் நன்மைகள் - ஊக்கமும், முயற்சியும் ஏற்படும்; பெருமையும், மகிழ்ச்சியும் கிடைக்கும். பரிசுப்பொருட்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் எதிர்காலத்தில் பயன்படும்.
பரிசு வழங்குவதால் ஏற்படும் தீமைகள் - பரிசு பெறுபவர் தன்னைத்தானே பெரிதாகக் கருதுவார்; பரிசு பெறாதவர் ஏமாற்றம், வருத்தம், பொறாமை அடைவார். பரிசு பெறாதவருக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படலாம்.
பள்ளியில் தண்டித்தலின் நோக்கங்கள் - குற்றம் செய்தவரை எதிர்காலத்தில் குற்றம் புரியாது தவிர்த்தல்; குற்றம் செய்தவர்களை திருத்துல்.
தண்டனையின் வகைககள் -திட்டுதல், அபராதம் விதித்தல், அவமதித்தல், வகுப்பில் நிற்கச் செய்தல், ஏளனம் செய்தல், அடித்தல்.
பள்ளியில் அதிக தண்டனை வழங்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது - பள்ளித் தலைமையாசிரியர்.
ஆளுமையை அறிந்துகொள்ள உதவும் காரணிகள் - ஒரு நபரின் செயல்பாடுகள், நடவடிக்கைகள்.
பள்ளிகளைச் சுற்றியுள்ள இடங்களையும், குடிநீர்க் குழாய், கிணறு மற்றும் பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்ய எந்த மாணவர்களை பள்ளியில் பயன்படுத்துவார்கள் - நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை.
மாணவர்கள் நலச் செயல்களை மேம்படுத்தும் காரணிகள் - போதிய காற்றோட்டம், ஒளி, குடிநீர், இருக்கை வசதி, புத்தக வங்கி, நூல் நிலையம்.
எந்தக் கிழமைகளில் பள்ளியில் தேசியக் கொடி ஏற்றப்படும் - திங்கள்கிழமை.
மாணவ, மாணவிகள் கொடி மரத்தின் முன் எந்த வடிவத்தில் நிற்க வேண்டும் - ப வடிவத்தில்,.
பள்ளியில் வகுப்பு தொடங்கும் முன் கூடும் காலைக் கூட்டத்தின் கால அவகாசம் எவ்வளவு - 15 நிமிடங்கள்.
மாணவர்கள் தினச் செய்தி படிப்பதினால் ஏற்படும் பயன் - பொது அறிவு, உலக நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள முடியும்.
ஆசிரியர் என்ற சொல்லின் பொருள் - குற்றத்தை நீக்குபவர், மாணவர்களிடம் குறை, நிறைகளை நீக்கி நல்வழிப்படுத்துபவர்.
தற்கால ஆசிரியர்களின் நிலை - வழிகாட்டி, நண்பர், தோழர்.
சிறந்த ஆசிரியரின் தகுதிகளாக கருதப்படுவது - ஆர்வம், பொறுமை, நேர்மை, நடுநிலை, நகைச்சுவை உணர்வு, இனிமையான குரல், இன்முகம்.
ஆசிரியர் எவ்வாறு மாணவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும் - ஆசிரியரின் நேர்மை, திறமை, உயர்ந்த பண்பைப் பொருத்து.
தலைமை ஆசிரியரின் பணிகள் - திட்டமிடல், மேற்பார்வை, போதித்தல்.
பள்ளியின் அனைத்துப் பணிகளையும், முன்கூட்டி திட்டமிட்டு செயல்படுத்தும் முறைக்கு - திட்டமிடல் என்று பெயர்.
ஆசிரியர் பணிச் சங்கங்களின் பெயர்கள் - பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சங்கம், தென்னிந்திய ஆசிரியர்கள் சங்கக் கூட்டணி, மாவட்ட ஆசிரியர்கள் கிளைச் சங்கங்கள், வட்டாரத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள், அகில இந்திய ஆசிரியர்கள் சம்மேளனம்.
யூனியனில் எந்த ஆசிரியர்கள் சேர முடியாது - அரசு மானியம் பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள். ஆனால் இவர்கள் தனியாக குழு அமைத்துக்கொள்ளலாம்.
தொடக்கப்பள்ளி சங்கத்தின் நிரந்தரப் பதவி வழித் தலைவர் யார் - சரகத் துணை ஆய்வாளர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் அமைப்பதன் நோக்கம் - கற்பிக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுதல், கல்வித் துறையின் புதிய அணுகுமுறைகளை அனுபவத்தின் மூலம் ஆராய்ந்து கருத்து தெரிவித்தல்.1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.

2. நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...? - ஒலி எனக்கு (Sound to me)

3. கவனம் - புலன் காட்சிகள் அடிப்படையாகும்.

4. கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.

5. ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.

6. வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.ரா

7.முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.

8.கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.

9. சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.

10. பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.

11. ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன? - வளருதல்

12. ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.

13. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? - ஐந்து

14. மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.

15. ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்

16. உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்

17. உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்

18. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ

19. எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை

20. நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.

21. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.

22. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.

23. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.

24. தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.

25. ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.

26. புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.

27. டோரனஸ் என்பவர் தந்துவவாதி.

28. தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ

29. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்

30. சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ்

31. முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி

32. மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.

33. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.

34. முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.

35. தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்

36. குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்

37. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்

38. மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி

39. குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.

40. 'சோபி' என்பது என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.

41.உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்

42. கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.

43. ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.

44. மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.

45. மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.

46. சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.

47. ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை.

48. பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது? - உடல் தேவை

49. அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.

50. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு

51. நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.

52. மனவெழுச்சி என்பது - உணர்ச்சி மேலோங்கிய நிலை

53. புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது? - சூழ்நிலை.

54. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு? - மெண்டல்

55. ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது? - அயோவா

56. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்

57. தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.

58. உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.

59. உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.

60. பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.

61. பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.

62. மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை

63. வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை

64. உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை

65. அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை

66. கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.

67. சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.

68. உடலால் செய்யப்படும் செயல்கள் எத? - நீந்துதல்.

69. அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே

70. மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.

71. வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.

72. கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல்

73. பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை.

74. தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.

75. 'உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்

76. உற்றுநோக்கலின் படிகள் - ஏழு

77. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்

78. வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? - உற்று நோக்கல் முறை.

79. பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.

80. மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்

81. அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.

82. குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்

83. அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்

84. குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்

85. குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்

86. திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை

87. ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி

88. புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.

89. பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.

90. புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.

91. ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து

92. புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.

93. குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை

94. கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை

95. ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.

96. நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.

97. ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை எனப்படும்.

98. எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.

99. கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி

100. வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.

101. தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்

102. கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்

103. உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.

104. உற்று நோக்கலின் படி - நான்கு

105. லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.

106. சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்

107. சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.

108. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்

109. கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.

110. பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.

111. மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை

112. வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.

113. கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.

114. அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.

115.அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.

116. மழலைப் பேச்சு எந்த வயது வரை ிருக்கும் - 4-5 வயதுவரை

117. எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.

118. எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.

119. குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.

120. மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.

121. சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.

122. உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.

123 . உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.

124. வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்

125. பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ

126. முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.

127. மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.

128. 'தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.

129. குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்

130. தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.

131. எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.

132. வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் குமரப் பருவம். ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம்.

133. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.

134. பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144

135 பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130

136. மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95

137. மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90

138. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.

139. கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.

140. முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.

141. சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு

142. ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை

143. தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்

144. ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.

145. காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு

146. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்

147. சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.

148. மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை

149. பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.

150. குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்

151. ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.

152. ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் - 3 - 4 மாதங்கள்.

153. பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்

154. ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம்.

155. உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு

156. பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்

157. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.

158. ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்

159. உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்

160. உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்

161. வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.

162. வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்

163. கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.

164. கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்

165. அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்

166. நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.

167. அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்

168. கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.

169. விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்

170. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்

171. தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்

172. ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை

173. நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்

174. கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்

175. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.

176. குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு

177. கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)

178. எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு

179. ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்

180. பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை

181. வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்

182. உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை

183. ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்

184. பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.

185. குழந்தை வளர்ச்சியில் பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நிறைவுகளை விட சமூகப்பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர் - எரிக்சன்

186. குழந்தைகள் சிந்திக்கும் முறைகள் பெரியவர்கள் சிந்திக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடும் என்று கூறிய உளவியலறிஞர் - பியாஜே

187. இயக்கம் - மொழி - ஆயத்த நிலை இவற்றில் கவனத்தை தீர்மானிக்கும் காரணி - இயக்கம் மற்றும் ஆயத்த நிலை

188. ஒருவனது நுண்ணறிவு முதிர்ச்சி நிலையைக் குறிப்பது - மன வயது

189. செயல்மையக் கல்வி ஏற்பாடு யாருடைய கோட்பாட்டின் கல்வி விளைவு ஆகும் - பியாஜே

190. அறிவின் வாயில்கள் எனப்படுபவை - புலன் உறுப்புகள்

191. வெள்ளைத்துணியில் துளி அளவு கருப்புமை நன்கு புலப்படுகிறது - இதில் கவனத் தொடர்பான காரணி - புதுமை

192. மீத்திறன் பெறஅறக் குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 130 -க்கு மேல்

193. பெட்ரண்டு ரஸ்ஸலின் சமூக மேம்பாட்டிற்கான கணித சமன்பாடு - Y=f(X,D,M)

194. தார்ண்டைக்கிள் கற்றல் முறை - முயன்று தவறிக்கற்றல்.

195. குமரப்பருவப் பிரச்சனைகளில் ஒன்று - தலைமுறை இடைவெளி

196. தான் என்னும் உணர்வு மெல்ல மறைந்து நாம் உணர்வை குழந்தைப் பெறுவது - சமூகவியல்பு

197. அடைவு ஊக்கியின் அளவினை மதிப்பிடப் பயன்படும் ஆளூமைச் சோதனை - பொருளறிவோடு

198. மேம்பட்ட நினைவிற்கு வழி வகுப்பது - பல்புலன்வழிக்கற்றல்

199. ஜான் டூயியினது கல்விக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி - வாழ்க்கை மையக் கல்வி

200. குறுகிய இடைவெளிகளைப் பூர்த்தி செய்து, காணும் பொருட்களை முழுமைப்படுத்திக் காணும் புலக்காட்சியமைப்பு விதி - மூட்ட விதி

201. பொருட்களின் இயல்புகள், மனிதனது செயலியக்கம் ஆகியவற்றின் இடைவினையினால் புலன் காட்சியின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது என விளக்கியவர்கள் - பியாஜே மற்றும் புரூனர்

202. உட்காட்சி வழிக்கற்றலை விளக்க கோஹலர் பயன்படுத்தியது - குரங்கு

203. தார்ண்டைக்கின் பயிற்சி விதி அலைவெண் விதி எனவும் அழைக்கப்படுகிறது.

204. வாகனங்களுக்கு நான்கு முதல் ஆறு வரையிலான எண்கள் தரப்படுவதன் உளவியல் காரணி - கவன வீச்சு

205. வழிக்காட்டுதல் கோட்பாடுகளில் பொறுத்தமற்ற ஒன்று - பிறழ்வு நிலையுடையோருக்கு மட்டும் தேவைப்படுவது.

206. ஸ்பியர்மென் கருத்துப்படி நுண்ணறிவு உள்ளடக்கியசு - பொதுக்காரணி G மற்றும் செயலுக்குரிய ஒரு சிறப்புக் காரணி S.

207. தெற்றுதல், திக்குதல் போன்ற மொழிப்பேச்சு குறைபாடுகளை எவ்வாறு நீக்கலாம் - தொடர் பயிற்சி மூலமாகவும், மருத்துவ உதவி மூலமாகவும்.

208. நடமாடும் கேள்விக்குறிகள் என உளவியலறிஞர் குரிப்பிடுவது - பிள்ளைப்பருவத்தினர்.

209. A,B என்ற குழந்தைகளின் மன வயது, காலவயது முறையே 8,6 மற்றும் 6,8 எனில் அக்குவந்தைகளின் நுண்ணறிவு ஈவு தொடர்பான சரியான கருத்து - A-யின் நுண்ணறிவு ஈவு B-யை விட அதிகம்

210. உளவியலறிஞர்கள் நுண்ணறிவு வளர்ச்சி முழுமைப் பெற்று விடுகிறது எனக்குறிப்பிடும் அதிகபட்ச வயது - 16

211. வளர்ச்சிப் பருவத்தில் தோன்றும் அறிதிறன் செய்பாட்டுக் குறைபாடு காரணமாக நடத்தையில் பின்தங்கியிருக்கும் குழந்தைகள் - மனவளர்ச்சி குன்றியோர்

212. ஆளுமையை அளவிடும் முறைகள் - வினா வரிசை முறை, தர அளவுகோல் முறை, புறத்தேற்று நுண்முறை

213. கிராமத்திலிருந்து குடும்பத்தைப் பிரிந்து நகரத்திற்கு கல்வி பயில செல்லும் மாணவனுக்கு ஏற்படுவது - மனப்போராட்டம்

214.குறிப்பிட்ட மனவெழுச்சி இயல்பான தொடர்புடைய பொருளிலிருந்து விலகி, முற்றிலும் தொடர்பில்லாத வேறொரு பொருளின் பால் செலுத்தப்படுதலைக் குறிப்பது - இடமாற்றம்

215. தொடக்கக் கல்வி நிலையில் மாணவர்களைக் குழுக்ளாகப் பிரிக்க பயன்படும் அளவுக்கோல் - செய்வினைத்திறன்கள், நுண்ணறிவு, சிறப்பு நாட்டங்கள்

216. மந்த புத்தியுள்ளோரின் நுண்ணறிவு வளர்ச்சி எந்த வயதில் நின்று போகக்கூடும் - 10 - 12 வயதில்

217. குழந்தை, ஒரு பொருளைப் பற்றி மன பிம்பங்கலைப் பயன்படுத்தி சிந்திக்கும் நிலை - உருவக நிலை

218. குழந்தையின் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் காரணி - உடல் நலக்குறைவு, நுண்ணறிவு, இரு மொழி வுழங்கும் குடும்பம்.

219. ஒரு தூண்டலை வழங்குவதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட துலங்கல் திரும்பத்திரும்ப தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தால். அத்தூண்டல் - வலுவேற்றி

220. நடத்தை மாற்றக் கோட்பாடு அடிப்படையில் கற்றலுக்கு மூன்று வெளிக்கட்டுப்பாடுகள் அவசியம் எனக்கூறியவர் - ஸ்கின்னர்.

221. பாவ்லாவின் கற்றல் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டது - நாய்

222. சிரித்தல், ஒலிகளை எழுப்புதல், சைகைகள் மூலம் சிறு குழந்தைகள் தங்கள் தேவைகளை பிறருக்கு தெரிவிக்க முற்படுவது - பேச்சுக்கு முந்தையநிலை

223. கற்றலின் இயல்பு சாராத கருத்து - கற்றல் சிறப்பு பொருந்திய உயிரிகளிடம் மட்டுமே காணப்படும்.

224. உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நனவு நிலை - மன எழுச்சி

225. மனவெழுச்சிகளை அறிவு, உணர்வு, உடலியக்கம் என்ற மூன்று இயல்பூக்க நடத்தைக் கூறுகளால் விளக்கியவர் - மக்டூகல்

226. பியாஜேயின் அறிதல் வளர்ச்சி கோட்பாட்டின்படி முன்பின் மாற்றங்களை குழந்தை நன்கு உணர முடியும் நிலை - பருப்பொருள் நிலை

227. ஒழுக்க வளர்ச்சியில் உளவியலாளர்கள் குறிப்பிடும் நிலைகள் - 4

228. குழந்தையின் தற்கருத்தினை பாதிப்பவை - மரபுக் காரணிகள், குழந்தை மீதான குடும்ப செல்வாக்கு, புறச்சூழ்நிலைகள்.

229. கற்றலின் விளைவாக ஒருவன் பெறும் இணக்கமான இசைவு பெற்ற உடலியக்க செயல்களை எவ்வாறு அழைப்பர் - செய்திறன்கள்

230. குழந்தையின் வாழ்க்கையில் குடும்பம் ஒரு - ஆதாரக்குழு

231. விரைவுக் கல்வித்திட்டம் வளமைக் கல்வித்திட்டம் எந்த குழந்தைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவை - மீத்திறன் குழந்தைகள்

232. மனவெழுச்சி சிக்கலில் ஒன்று - இருமுகப் போக்கு

233. பிள்ளைப் பருவத்தினரை இவ்வாறும் அழைப்பதுண்டு - உயிருள்ள கேள்விக்குறிகள்

234. புலன் உணர்ச்சிகளால் தூண்டப்படும் மன எழுச்சிகள் முறையே அன்பு மற்றும் பொறாமை

235. வளர்ச்சியின் காரணமாக முன்னேற்றம் நிகழலாம் அல்லது நிகழாமலும் போகலாம்.

236. எல்லாப் பருவத்திலும் வளர்ச்சி விகிதம் ஒரே சீராக அமைவதில்லை.

237. செயல்படு ஆக்க நிலையிறுத்தம் ஸ்கின்னரால் துலங்கல் சார் ஆக்க நிலைநிறுத்தம் என அழைக்கப்பட்டது.

238. ஒரு குழந்தை தனது பொம்மையை குளிப்பாட்டி, பாலூட்டி உறங்கச் செய்வது போல் நடந்து கொள்வது மன வளர்ச்சியின் செயலுக்கு முற்பட்ட நிலை

239. அச்சம் என்பது ஒரு - அடிப்படை மன எழுச்சி

240. மகிழ்ச்சியற்ற சுற்றுப்புறம், நண்பர்கள் இல்லாத முன் பிள்ளைப் பருவக் குழந்தைகளின் பிரச்சனை - தாழ்மை உணர்வு

241. உளத் தடுமாற்றங்களால் பீடிக்கப்பட்டவர்களின் நடத்தைகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - நெறிபிறழ் உளவியல்

242. கவனித்தலை தீர்மானிக்கும் புதுமை ஒரு - புறக்காரணி

243. புலன்காட்சியைத் தோற்றுவித்த ஒரு பொருள் இன்றியே அப்பொருள் பற்றி உணர்தல் - சாயல்

244. ஒப்பார்குழு ஆதிக்கம் தலைதூக்கி நிற்கும் பருவம் - குமரப்பருவம்

245. ஃப்ராய்டு மன பாலூக்க ஆளுமை வளர்ச்சியை 5 படிநிலைகளாக விளக்குகிறார்.

246. நினைவு கூர்தலின் முதல் நிலையாகக் கருதப்படுவது - கற்றல்

246. பின்னர் கற்றலானது முன்பு கற்றதை மறத்தல் இதற்கு என்ன பெயர் - பின்னோக்கத் தடை

247. முன்பு கற்றவை பின்னர் கற்றதை மறத்தல் இதற்கு என்ன பெயர் - முன்னோக்கத் தடை

248. டேசிஸ்டாஸ் கோப் என்னும் கருவி எதனை அளவிடப் பயன்படுகிறது - கவன வீச்சு

249. மறதிக்குக் காரணியாக அமைவது - அச்சம்

250. மறதிக்கு அடிப்படையான காரணம் - பயன்படுத்தாமை

251. ஒரே பாடத்தை நீண்ட நேரம் ஒரே கற்பித்தல் முறையில் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு ஏற்படுவது - சலிப்பு

252. ஒரே பாடத்தை நீண்ட நேரம் பல்வேறு கற்பித்தல் முறையில் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு ஏற்படுவது - மகிழ்ச்சி

253. நினைவு கூர்தலின் இறுதி நிலையாகக் கருதப்படுவது - மீட்டுக் கொணர்தல்

254. கற்றல், மனதிலிருத்தல், மீட்டறிதல், மீட்டுக் கொணர்தல் ஆகிய படிகளைக் கொண்டது - நினைவு

255. பழைய கற்றலானது புதிய கற்றலுக்கு உதவுவது - பயிற்சி மாற்றம்

256. பயிற்சி மாற்றக் கோட்பாடான பொதுவிதிக் கோட்பாட்டை உருவாக்கியவர் - ஜட்

257. பயிற்சி மாற்றக் கோட்பாடான உளப்பயிற்சி கோட்பாட்டை உருவாக்கியவர் - வில்லியம் ஜேம்ஸ்

258. முதலில் கற்ற செயல் புதிய செயலை கற்பதற்கு உதவி செய்தால் அந்த பயிற்சி மாற்றத்திற்கு பெயர் - நேர் பயிற்சி மாற்றம்.

259. முதலில் கற்ற செயல் புதிய செயலைக் கற்பதற்கு தடையாக இருந்தால் அந்த பயிற்சி மாற்றத்திற்கு பெயர் - எதிர் பயிற்சி மாற்றம்

260. முதலில் கற்ற செயலானது ஒர் புதிய செயலைக் கற்பதற்கு உதவாமலோ அல்லது தடையாக இல்லாமலோ இருந்தால் அந்தப் பயிற்சி மாற்றத்திர்கு பெயர் - பூஜ்ய பயிற்சிய மாற்றம்

261. மனதில் இருத்தியதை வெளியே ஒர் தூண்டுதலாய்த் தெரியும் பொழுது அதை அடையாளம் கண்டு கொள்வது - மீட்டறிதல்

262. கற்றவற்றை நமக்குத் தேவைப்படும் வரை மனதில் வைக்கப்படும் நினைவின் பகுதி - மனத்திலிருத்தல்

263. குறுக்கீடுக் கொள்கை எதனுடன் தொடர்புடையது - மறதி.

264. மறதி வளைவுப் பரிசோதனையை அளித்தவர் - எபிங்காஸ்

265. கற்றலுக்கு ஊக்கம் இல்லாமலிருந்தால் கற்பவர் தேர்ச்சியடைவதில்லை இதற்கு என்ன பெயர் - ஊக்கு வித்தல் எல்லை

266. மாணவர்களின் குறிக்கோள் எளிதாக அடையக் கூடியதாக இருந்தால் அந்த மாணவர் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் இழந்து விடுவார் இதற்கு என்ன பொருள் - உளவியல் எல்லை

267. ஒருவன் கற்றலில் தேவையான முன்னேற்றத்தை அடைந்த பொழுது மேற்கொண்டு எத்தகைய முன்னேற்றமும் இருக்காது இதற்கு என்ன பெயர் - அறிவு எல்லை

268. பயிற்சியில் முன்னேற்றமில்லாதபொழுது கற்றல் நிகழ்வு நிலையாக உள்ளது இதற்கு என்ன பெயர் - தேக்க நிலை

269.பயிற்சி மாற்றக் கோட்பாடன குறிக்கோள் கோட்பாட்டை உருவாக்கியவர் - பாக்லி

270. ஒரு கற்றல் வரைபடத்தில் கற்றலின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருக்கிறது இதன் பொருள் - பூஜ்ஜய முன்னேற்றம்

271. கற்றல் வரைபடத்தில் கற்றலின் வளைவின் தட்டையான பகுதிக்கு என்ன பொருள் - தேக்க நிலை

272. கற்றல் வரைபடத்தில் கற்றல் தொடக்கத்தில் குறைவாகவும் பின்னர் பயிற்சியினால் அதிகமாக இருப்பதையும் குறுக்கின்றது - இதற்கு என்ன பொருள் - நேர் மறை முன்னேற்றம்

273. ஒரு கற்றல் வரைபடத்தில் கற்றல் தொடக்கத்தில் வேகமாக நிகழ்த்தும் பின்னர் பயிற்சியினால் மெதுவாக நிகழ்கிறது இதற்கு என்ன பொருள் - எதிர்மறை முன்னேற்றம்.

274. வயதுகேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர் - பினே - சைமன்.


No comments:

Post a Comment