Sunday 24 March 2013

TET PSYCHYLOGY 003



PSYCHOLOGY Q A










போதனைப் படிகளை வரிசைப்படித்தியவர் - ஹேர்பார்டியன் என்ற உளநூல் அறிஞர்.
ஹேர்பார்டியன் படிநிலைகள் - ஆயத்தம் அல்லது தயார் செய்தல், முன்வைத்தல், விளக்கமளித்தல், ஒழுங்குபடுத்துதல்.
ஆயத்தம் என்பது - மாணவனை எழுந்து நிற்கச் செய்வது, சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பு ஏற்படுத்துவது, சிறு விளக்கங்களின் மூலம் பாடத்தின் மீது ஆர்வம் ஏற்படச் செய்வது.
முன் வைத்தல் என்பது - அன்றைய பாடத்தலைப்பை; விரிவாகக் கூறுவது, கருத்துக்களை விளக்குவது, ஆர்வம் ஏற்படச் செய்வது.
விளக்கமளித்தல் என்பது - விவரங்களை விளக்குதல், சாதனங்களை பயன்படுத்துதல், படங்கள் கதைகளை விளக்குதல்.
ஒழுங்குப்படுத்துதல் என்பது - கற்றவைகளை வரிசைப்படுத்துதல், பயிற்சி அளித்தல், மீள் பார்வை.
நடைமுறைப் படுத்துதல் என்பது -பரிசீலித்தல், சோதித்தல், வாய்மொழி வினா, எழுத்து வினா, வாய்மொழிக் கணக்கு, படம் வரையச் செய்தல், வீட்டு வேலை கொடுப்பது.
அறிவுவகைப் பாடங்களின் படிநிலைகள்:

1) ஆயத்தம் அல்லது தயார் செய்தல்

2) முன் வைத்தல்

3) விளக்கமளித்தல்

4) ஒருங்குபடுத்துதல்

5) கற்றவைகளை நடைமுறைப்படுத்துதல்

திறன்வகைப் பாடங்களின் படிநிலைகள் :

1) திட்டமிடல்

2) தயாரித்தல்

3) வேலை செய்தல்

4) வேலையை முடித்தல்

5) பதிவு செய்தல்

6) மதிப்பிடுதல்

சுவையுணர்வு வகைப் பாடங்களின் படிநிலைகள்:

1) ஆயத்தம்;

2) விளக்குதல்

3) ஆராய்தல்
மதிப்பிடுதல் என்பது - ஆசிரியர் கற்பித்த பாடங்களை எந்தளவிற்கு புரிந்துள்ளனர் என்பதைக் கண்டுபிடிப்பதே.
ஆசிரியர் மதிப்பீடுகள் எதன் அடிப்படையிலானது - தரம், செயற்பாடு, திருத்தங்கள், மறுபரிசீலனை.
மதிப்பெண் வழக்கும் முறை என்பது - 1 முதல் 100 வரை மொத்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பை எழுத்து (Letter marks) மூலம் குறிப்பிடுதல் மாணவர்களின் பழக்கங்கள், திறமை. மனநிலை நடத்தை, செயல் மதிப்பிட ABC என்ற ஆங்கில எழுத்து
அ) மேல்நிலை (நன்று)

ஆ) நடுத்தரம் (சுமார்)

இ) கடை நிலை (மோசம்)
மாணவர்களை ஆசிரியர்கள் எவ்வாறு விளக்கக் குறிப்பு எழுதும் முறை மூலம் பிரிக்கிறார்கள் - எண், எழுத்து, அடிப்படையில் மற்றும் ; மதிப்பீட்டாலும் விளக்கக் குறிப்பு முறையாலும்.
பல்வேறு சோதனையின் வகைகள்

1. வாய்வழிச் சோதனை

2. எழுத்துச் சோதனை

3. செய்து காட்டும் சோதனை
வாய்வழிச் சோதனை - ஞாபகசக்தியை அதிகரிக்கலாம், அறிவை எளிதில் சோதிக்கலாம்
எழுத்துச் சோதனை - மாணவனின் தரத்தை மதிப்பிடவும், தேர்ச்சி அறிக்கை கொடுக்கவும் உதவும்.
செய்து காட்டும் அல்லது செயல் முறைச் சோதனை - துணி நெய்தல், தையல் துணி, தட்டச்சு செய்தல், பல்வேறு பணிகளையும் சோதனை மற்றும் செய்து காட்டல் மூலம் மதிப்பிட முடியும்.
சோதனைகளின் வகைகள்

1. நுண்ணறிவுச் சோதனை

2. தனிவிருப்பச் சோதனை

3. திறன் அறிய விரும்பும் சோதனை

4. கவர்ச்சிச் சோதனை

5. குறையறிவுச் சோதனை

6. முன்னறிவுச் சோதனை

7. எழுத்துச் சோதனை

8. படச் சோதனை

9. வாய்வழிச் சோதனை

10. செயல் திறன் சோதனை

11. தனியாளியல் சோதனை
குறையறிச் சோதனை - மாணவர்களிடத்தில் கற்றலில் காணப்படும் குறைபாடுகள், நடை முறைச் சிரமங்கள் அறியும் சோதனை
தேர்வு நடத்துவதின் அவசியம் -
ஆசிரியர் பணிகளை மதிப்பிடவும், தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுக்க மாணவர்களிடையே உற்சாகம் ஏற்பட மேல் வகுப்புக்குத் தேர்ந்தெடுக்க.
தேர்வுகளின் குறைபாடுகள் -

அடிக்கடி தேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும்.
தேர்வினால் ஏற்படும் நன்மைகள் -
மாணவர்கள் கற்ற அறிவைப் பயன்படுத்த முடியும். ஆர்வத்துடன் வேலை செய்ய, படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் திறனை முடிவு செய்து சான்றிதழ்கள் வழங்க முடியும்.
பழைய வினாத்தாள் முறைகள்- விரிவாகக் கட்டுரை வடிவில் கேட்கப்பட்டது. குறிப்பு வரைதல் ஒப்பிட்டு விளக்குதல்.
புதிய வினாத்தாள் முறைகள் -
சுருக்கமாகவும், தெளிவாகவும் விரிவாகவும் உள்ளன.
பழைய வினாத்தாள் முறையின் சிறப்பியல்புகள் - விரைவாகவும் எளிதாகவும் தயாரிக்கலாம். கையெழுத்து மொழிநடை, பிழையின்றி எழுதல், குறைவான வினா, செலவு, முடிவு.
பழைய வினாத்தாளின் குறைகள் -
ஆசிரியர் மனநிலை, விருப்பு வெறுப்புகளுக்கேற்ப முழு மதிப்பெண்கள் கிடைக்காது. மாணவர்களின் முழுத்திறனையும் அளவிட முடியாது. மதிப்பீடு ஒரே அளவில் செய்வதில்லை.
புதுமாதிரி வினாக்களின் சிறப்புகள் -
மனப்பாடம் செய்ய வாய்ப்பில்லை, மாணவர்களின் உண்மையான திறனை அளவிட முடியும். விரைவாகவும், எளிதிலும் மதிப்பீடு செய்யலாம், மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை.
புதுமாதிரி வினாக்களின் குறைகள் -
மாணவர்கள் சிந்திக்காமல் உடனடியாக விடையளிக்காமல், ஒப்பிட்டுத்திறன், கட்டுரை, எழுதல், வரிசைப் படுத்துதல், எழுதும் திறன், திறமைகளை சரியாக சோதிக்க முடியாது, சிந்திக்கும் திறன், மொழி நடை, இலக்கண நடையை சரியாக மதிப்பிட முடியாது.
ஏற்புடைமை என்பது - எந்தக் குறிப்பிட்ட அறிவுப் பகுதியைச் சோதிக்க விரும்புகிறாமோ அக்குறிப்பிட்ட அறிவுப் பகுதியை மட்டும் சோதிப்பது.
நம்பகத் தன்மை என்பது - ஒரு சோதனையை எத்தனை முறை சோதித்தாலும் ஒரே மாதிரி விடை அமைவது.
மாறுபாடின்மை என்பது - ஒரு முறைக்கு இருமுறை ஒருவனுடைய விடையைத் திருத்தினாலும் அவன் பெறும் மதிப்பெண் மாறக்கூடாது.

No comments:

Post a Comment